டெல்லியில் கன மழை காரணமாக மஞ்சள் அலர்ட் - சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு !!

டெல்லியில் கன மழை காரணமாக மஞ்சள் அலர்ட் - சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு !!

டெல்லியில் கன மழை

தேசிய தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கனமழை பெய்துவருகிறது.

இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் சுரங்கப்பாதைகளில் வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.

வடக்கு, தெற்கு மற்றும் மத்திய டெல்லி பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்துவருகிறது. பீக் ஹவர் என்பதாலும், டெல்லியின் முக்கியமான பகுதிகள் மழைநீர் தேங்கியதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட பல கி.மீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், அலுவலகத்துக்கு செல்வபவர்கள் உட்பட பலர் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின் படி இக்னோ பகுதியில் நேற்று (25.07.2024) காலை 08.30 முதல் இன்று காலை 06.30 மணி வரை 34.5 மி.மீ மழையும், டெல்லி பல்கலைக்கழக பகுதியில் 89.5 மி.மீ மழையும் பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஜூலை 28-ம் தேதி (சனிக்கிழமை) வரை மழை தொடரும் என்றும், அன்று வரை டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

Tags

Next Story