நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் தொழில்முனையம் மேம்பாட்டு நிகழ்வு

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் தொழில்முனையம் மேம்பாட்டு நிகழ்வு

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் தொழில்முனையம் மேம்பாட்டு நிகழ்வு

நாமக்கல் டிரினிடி மகளிர் கல்லூரியில் தொழில்முனையம் மேம்பாட்டு நிகழ்வு

நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதுமை மையத்தின் சார்பில் “ என் கதை – என் அனுபவம்” என்ற தலைப்பிலான “சாதித்துக் கொண்டிருக்கும் தொழில்முனைவோர் - மாணவியர் கலந்துரையாடல் நிகழ்வு” கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் காஸ்ட்யூம் டிசைன் பேசன் மற்றும் நியூட்ரிசன் டயடிக்ஸ் ஆகிய துறைகளின் பங்களிப்போடு நடைபெற்ற இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராக திருச்செங்கோடு – வேதா ஆயில் கார்ப்பரேசன், வேதா டிரான்ஸ்போர்ட் மற்றும் கௌரி பிரிண்டிங் பிரஸ் ஆகிய தொழில் நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் டி.ஷ்யாம் பாலாஜி கலந்து கொண்டார். தொழிலை நிர்வகிக்க கால மேலாண்மை மிகவும் தேவையாக உள்ளது. பணிபுரியும் பணியாளர்களிடம் தொழிலுக்கு தகுந்தபடி வேலை வாங்குவது என்பது மிகவும் முக்கியம். சந்தை நிலவரம் முதல் விற்பனை நுணுக்கம் வரை அனைத்தையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும், காலத்திற்கேற்ப தொழில்நுட்ப வளர்ச்சியினையும் நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம். தற்போது தொழில் நடத்தும் பெரும்பாலான தொழில்முனைவோர்கள் எல்லாம் ஒன்றுக்கும் மேற்பட்ட பல தொழில்களை செய்து வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்னவென்றால் ஒரு தொழில் நடத்தும்போது அதில் நட்டம் ஏற்பட்டால் அதனை மற்றொரு தொழில் மூலம் ரூடவ்டு கட்டலாம் என இந்நிகழ்வில் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமிநாராயணன், இயக்குநர் உயர்கல்வி, பேராசிரியர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story