சீருடைப் பணியாளர் பணிக்கு முன்னாள் படைவீரர் / படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

சீருடைப் பணியாளர் பணிக்கு முன்னாள் படைவீரர் / படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

முன்னாள் படைவீரர் / படைவீரர்கள் 

ஆட்சியர் மருத்துவர் ச.உமா தகவல்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட / மாநகர ஆயுதப்படை) பெண்கள் 780 காலிப்பணியிடங்கள், இரண்டாம் நிலைக் காவலர் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 1,819 காலிப்பணியிடங்கள், சிறைத் துறையில் இரண்டாம் நிலை சிறைக் காவலர் ஆண்கள் 83, பெண்கள் 03 காலிப்பணியிடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளர் 674 காலிப்பணியிடங்கள் மொத்தம் 3,359 காலிப்பணிடங்களில் 5% முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அப்பணியிடங்களை நிரப்பிட 47 வயது மேற்படாத முன்னாள் படைவீரர்கள் மற்றும் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைவீரர்கள் ஆகியோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

எனவே, நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த 10 கம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 01.07.2023 அன்று 47 வயது பூர்த்தி செய்திடாத முன்னாள் படைவீரர்கள் மற்றும 01.07.2023-க்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வு பெறவுள்ள படைப்பணியில் உள்ள படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு 17.09.2023-க்குள் விண்ணப்பித்து பயனடைய வேண்டுமாறும், விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்கள் தாங்கள் விண்ணப்பித்த விபரத்தை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறும், மேலும் விபரங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியினையும், உதவி இயக்குநர், முன்னாள் படைவீரர் நலன், நாமக்கல் அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story