அக்னிவீர்வாயு தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

அக்னிவீர்வாயு தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

ஆட்சியர் ச.உமா 

ஆட்சியர் ச.உமா தகவல்

இந்திய இராணுவத்தால் நடத்தப்பட உள்ள அக்னிவீர்வாயு தேர்வில் கலந்து கொள்வதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 17.08.2023 கடைசி தேதி ஆகும். 13.10.2023 முதல் இத்தேர்வு நடைபெறும். பிறந்ததேதி 27.06.2003 முதல் 27.12.2006க்குள் இருக்க வேண்டும். திருமணமாகாத ஆண் / பெண்ணாக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: 12-ஆம் வகுப்பு (10+2) கணிதம், இயற்பியல், ஆங்கிலம் பாடப்பிரிவைப் பயின்றவர்கள்) / டிப்ளமோ இத்தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி தாள்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது..

மேலும், இத்தேர்வு குறித்த விவரங்களை நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது அலுவலக தொலைபேசி எண் 04286 -222260 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் பங்குபெற்று பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story