திருச்செங்கோட்டில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டில் உள்ள கைலாசம்பாளையம் அருந்ததியர் தெருவில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார். டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வை வீடு வீடாக சென்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெங்கு குறித்தான விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினார், நிகழ்ச்சியில் அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் செல்வி ராஜவேல், ரமேஷ் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர். மழைக்காலம் என்பதால் நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்செங்கோடு நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் கொசுப்புழு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகராட்சியின் மூன்றாவது வார்டு கைலாசம்பாளையம் பகுதியில் அருந்ததியர் தெருவில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வீட்டின் முன் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளை மூடிகள் போட்டு வைக்க வேண்டும் துணிகள் போட்டு மூட வேண்டாம். ஆட்டுக்கல் உரல் தேங்காய் சிரட்டை மற்றும் திறந்திருக்கும் பாத்திரங்கள் டயர்கள் இவைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என வீடு வீடாகச் சென்று பெண்களிடம் பேசி அறிவுறுத்தி, கொசு புழுக்கள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார். திறந்திருந்த தண்ணீர் தொட்டிகளில் புழுக்கள் நிறைந்தால் அந்த தண்ணீரை கீழே கொட்டி புழுக்களை அளித்தனர் மேலும் குழுக்கள் இல்லாத தண்ணீர் தொட்டிகளில் மருந்துகளை தளித்தனர் அதே பகுதியில் ஒவ்வொரு தெருக்களிலும் புகை மருந்து அடிக்கப்பட்டது. கொசுக்கள் பரவுவதால் உண்டாகும் தீமை டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்பு உயிர் இழப்பு போன்றவை குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி நல்ல தண்ணீரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் மழைநீர் தேங்காாமல் பார்த்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அப் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வு உள்ளதா என்பது குறித்து நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு கேட்டறிந்தார். அனைத்து வார்டுகளிலும் இது போல் ஆய்வு மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என சேர்மேன் தெரிவித்தார். இந்த பணியின் போது நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல், ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர் டி பி சி பணியாளர்கள் அனைவரும் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்துகளை தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.