பள்ளிபாளையம் நகராட்சியில் பூங்கா நடைபயிற்சி, உடற்பயிற்சி கூடம் மாவட்ட ஆட்சியரிடம் எம். செல்வராஜ் கோரிக்கை
கோரிக்கை
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்களை பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், துணைத்தலைவர் ப.பாலமுருகன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்று வழங்கினர் .
அதில் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு காவிரி கரையோரம் பெரியார் நகர் என்ற பகுதியில் சமீபத்தில் நீண்ட பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் வருவாய் துறை சார்பில் அகற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடத்தினை, பள்ளிபாளையம் நகராட்சி சார்பில் பூங்கா நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
Tags
Next Story