கும்பாபிஷேக திருவிளக்கு வழிபாடு
திருவிளக்கு வழிபாடு
குமாரபாளையத்தில் கும்பாபிஷேகநடந்தது.
குமாரபாளையம் 24 மனை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா சில நாட்கள்முன்பு நடந்தது. இதையடுத்து மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. அதில் ஒரு கட்டமாக பெண் பக்தர்கள் குழு சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று, அம்மன் சரணம் சொல்லியவாறு வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. அக். 10ல் 108 சங்கு பூஜை, அக். 6ல் திருக்கல்யாண உற்சவம், கோ பூஜை, மாங்கல்ய பூஜை உள்ளிட்ட 10 விதமான பூஜைகள், 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஆகியன நடக்கவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Next Story