குருசாமிபாளையம் செங்குந்தர் கல்வி வளர்ச்சி நல சங்க மகாசபை கூட்டம்
மகாசபை கூட்டம்
குருசாமிபாளையத்தில் செங்குந்தர் பெருமக்கள் கல்வி வளர்ச்சி நல சங்கம் சார்பில் நடந்த மகாசபை கூட்டத்தில், நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் செங்குந்தர் கலையரங்கத்தில் செங்குந்தர் பெருமக்கள் கல்வி வளர்ச்சி நல சங்கம் சார்பில் மகாசபை கூட்டம் நடைபெற்றது.
இந்த மகாசபை கூட்டத்திற்கு தலைவர் எம்.வேதநாயகம், ஊர் பெரிய தனக்காரர் டி.தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சங்கத்தின் 2022 - 23 ஆம் ஆண்டு வரவு - செலவு அங்கீகாரம் செய்தல் குறித்தும், சங்கத்திற்கு 2023-24 ஆம் ஆண்டு வரவு - செலவு கணக்கு பராமரிக்க தணிக்கையாளர் நியமனம் செய்வது குறித்தும், சங்கத்திற்கு சட்ட ஆலோசகராக வக்கீல் ஒருவரை தேர்வு செய்வது குறித்தும், சங்கத்தின் செயல்பாடுகள், கூட்ட நடவடிக்கைகள், மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிப்பது மற்றும் வரும் கல்வி ஆண்டில் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை மற்றும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உபத்தலைவர் எஸ்.தங்கவேல், செயலாளர் ஏ.அர்த்தனாரி, பொருளாளர் கே.அர்த்தநாரி, வழக்கறிஞர் ஆர்.பன்னீர்செல்வம், உறுப்பினர்கள் எஸ்.பிரகாசம், ஏ.ஜனார்த்தனன், என்.மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.