நாமக்கல் நகராட்சி தூய்மை பணியாளர்கள் கௌரவிப்பு!
தூய்மை பணியாளர்கள் கௌரவிப்பு!
இந்தியா முழுவதும் தூய்மையே எங்களின் சேவை என்ற தலைப்பின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு நகரத்தை தூய்மையாக வைக்க உதவி செய்யும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்க ஏற்பாடுகள் செய்ய தெரிவிக்கப்பட்டது அதன்படி
நாமக்கல் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு எர்ணாபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் பூபதி ராஜா யோகா பயிற்சி அளித்தார். மேலும், தூய்மை பணியாளர்களின் உடல் நலத்தை பேணுவதற்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
நாமக்கல் நகர் மன்ற தலைவர் து.கலாநிதி, ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார், பாஸ்கரன், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர்.