நாமக்கல் அண்ணா கல்லூரியில் சுத்திகரிப்பு இயந்திரங்கள்
சுத்திகரிப்பு இயந்திரங்கள்
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 8 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களின் செயல்பாட்டினை நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தெரிவித்ததாவது, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் சுமார் 3,000 க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மேலும் இக்கல்லூரியில் பேராசிரியர்கள், பணியாளர்கள் 200 க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆக மொத்தம் 3,200 மேற்பட்ட மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் வழங்கும் பொருட்டு, கல்லூரி வளாகத்திலுள்ள முதன்மை கட்டடம், வேதியியல் துறை, தாவரவியல் துறை, இயற்பியல் துறை, கணிதம் மற்றும் கணிணி அறிவியல் துறை, நூலகம் மற்றும் சிற்றுண்டி கூடம் ஆகிய 8 இடங்களில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4.70 இலட்சம் மதிப்பீட்டில் 8 குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் 1 மணி நேரத்திற்கு 100 லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும். இதனை மாணவ, மாணவிகள் பாதுகாப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ராஜேஸ்குமார் எம்.பி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் ராஜா, மோகனூர் ஒன்றிய திமுக செயலாளர் பெ.நவலடி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.