தூய்மைப் பணி பெண் ஓட்டுநர்களுக்கு மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள்

தூய்மைப் பணி பெண் ஓட்டுநர்களுக்கு மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள்

மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள்

தமிழ்நாடு அரசின் நகர்ப்புற உள்ளாட்சி துறை சார்பில் திருச்செங்கோடு நகராட்சிக்கு 27 மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த 27 வாகனங்களுக்கும் பெண்களே ஓட்டுனர்களாக நியமிக்கப்பட்டிருப்பது புதுமையான ஒன்றாக கருதப்படுகிறது. ரூ57 லட்சம் மதிப்பிலான 27 பேட்டரி வாகனங்களை திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில் நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அனுப்பி வைத்தார். 27 வாகனங்களையும் பெண்களே ஓட்டிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சேகர் பொறியாளர் சரவணன், நகர துப்புரவு அலுவலர் வெங்கடாசலம், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இந்த 27 வாகனங்கள் பெரிய வாகனங்கள் செல்ல முடியாத பகுதியான சந்து பகுதிகள் சிறிய தெருக்களில் சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அந்தந்த இடங்களிலேயே பிரித்து வாங்க ஏதுவாக இருக்கும் எனவும், இந்த வாகனங்களை பெண்களே இயக்குவது முதல் முறையானது, புதியது எனவும் இதனை நகராட்சிக்கு வழங்கி உதவிய தமிழ்நாடு முதல்வர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு திருச்செங்கோடு நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story