நாமக்கல் வட்டார தடகளப் போட்டியில் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி சாதனை
குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி
நாமக்கல் வட்டார தடகளப் போட்டியில் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நாமக்கல் வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டிகள், காவக்காரப்பட்டியில் நடைபெற்றது. இதில், நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களில், 17வயதிற்குட்பட்டோர் பிரிவில், தட்டெறிதல் போட்டியில் தனுஸ்ரீ என்ற மாணவி இரண்டாம் இடம் பெற்றார். ஈட்டி எறிதல் போட்டியில் ஹாசினி என்ற மாணவி 3-ம் இடத்தைபெற்றார். 14-வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தட்டெறிதல் போட்டியில், தர்ஷணா முதல் இடத்தைப் பெற்றார். நீளம் தாண்டுதலில் பரணி மூன்றாம் இடத்தையும், 400 மீ. ஓட்டத்தில் தனுஷிகா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
14-வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கோ-கோ குழுப்போட்டியில் பள்ளி மாணவியர் இரண்டாமிடம் பெற்றனர்.செஸ் போட்டியில், 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாணவி ஜெயஸ்ரீ நான்காம் இடத்தைப் பிடித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த, மாணவ மாணவிகளை குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி தாளாளர் தங்கவேல், இயக்குனர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.