தேசிய தபால் தினம் கொண்டாட்டம்

தேசிய தபால் தினம் கொண்டாட்டம்

தபால் தினம்

குமாரபாளையத்தில் தேசிய தபால் தினம் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழுவின் சார்பில் தேசிய தபால் தினம் அமைப்பளர் சீனிவாசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அஞ்சல் அட்டை வழங்கி கடிதம் எழுத கற்பிக்கப்பட்டது. சீனிவாசன் பேசியதாவது:

இன்றைய நாட்களில் செய்தியை அனுப்புவது என்பது தொலைபேசி வாயிலாக மட்டுமே உள்ளது எனவே குழந்தைகள் அஞ்சல்அட்டை மூலமாகவும் செய்திகளை பரிமாறிக் கொள்ள முன்வர வேண்டும். நண்பர்களின் பிறந்தநாள் மற்றும் விழாக் காலங்களில் அஞ்சலட்டை மூலமாக வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். இதன் மூலம் தங்களுடைய எழுத்தாற்றல் வளரும். மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து கடிதப் பரிமாற்றம் இருந்து வருகிறது. நவீன காலத்தில் கடித பரிமாற்றம் என்பது குறைந்து, தொலைபேசி வாயிலாக செய்திகள் பரிமாறப்படுகிறது. மாணவ மாணவிகள் செய்தி பரிமாற்றத்தை பல்வேறு வகையான அஞ்சல் கடிதங்கள் மூலம் பரிமாறிக் கொள்ளலாம். இனிவரும் நாட்களில் சிறந்த முறையில் அஞ்சல் கடிதங்களை எழுதுவோருக்கு தளிர்விடும் பாரதம் சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story