மோகனூரில் அமைய உள்ள சிப்காட்க்கு நிலம் ஒப்படைப்பு - மாவட்ட ஆட்சியரிடம் பி.மணி வழங்கினார்

மோகனூரில் அமைய உள்ள சிப்காட்க்கு நிலம் ஒப்படைப்பு - மாவட்ட ஆட்சியரிடம் பி.மணி வழங்கினார்

நிலம் ஒப்படைப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஜெயமணி புளு மெட்டல்ப் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் பி.மணி நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா அவர்களை சந்தித்து தனது நிறுவனத்திற்கு சொந்தமான 69 ஏக்கர் நிலத்தில் சிப்காட் அமைக்க ஆட்சேபனை இல்லை என கடிதம் வழங்கினார்.

ஜெயமணி புளு மெட்டல்ப் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் பி.மணி அவர்கள் 23.09.2023 அன்று நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிப்காட் அமைப்பதற்கு நடந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு வர முடியாத காரணத்தால் கலந்து கொள்ள முடியவில்லை எனவும், சிப்காட் அமைய உள்ள இடத்தில் தனக்கும், மோகனூர் வட்டம், என்.புதுப்பட்டியில் செயல்பட்டு வரும் தனது நிறுவனத்திற்கும் சொந்தமான சுமார் 69 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப்படவுள்ளதை அடுத்து, என்னுடைய நிலம் மற்றும் எனது நிறுவனத்தின் பெயரில் உள்ள நிலத்தையும் சிப்காட் நிலம் எடுப்பதற்கு தனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், சிப்காட் எல்லைக்குள் தனது நிறுவனம் தொடர்ந்து நடைபெற ஆவண செய்து தர வேண்டுமென அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story