மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி ஆட்சியரிடம் மனு

மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம்தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் சிறு தொழில் சங்கத்தினர் மனு அளித்தனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட சிறு, குறு மற்று நடுத்தர தொழில்கள் கூட்டமைப்பின் (எம்எஸ்எம்இ) தலைவர் கோஸ்டல் இளங்கோ, செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சின்னுசாமி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட தேங்காய் நார், ஃபைபர் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் குழந்தைவேல், செயலாளர் தசரதன், பொருளாளர் மந்திரிகுமார், நாமக்கல் ஆல் மோட்டார் ஒர்க்க்ஷாப் அசோசியேசன் தலைவர் சென்னிமலை, செயலாளர் தங்கவேல், திருச்செங்கோடு இன்ஜினியரிங் கிரில் ஒர்க்ஸ் அசோசியேசன் தலைவர் கதிர்வேல், செயலாளர் மாணிக்கம், பொருளாளர் ராஜாமணி, நாமக்கல் தாலுகா சேகோ ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பிரபாகரன், செயலாளர் முத்துராஜா, பொருளாளர் ராஜா, பிளை ஆஷ் பிரிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் அன்பழகன், ஜெயக்குமார், ரங்கராஜன், நாமக்கல் பாடி பில்டர்ஸ் அசோசியேசன் தலைவர் தங்கவேல், செயலாளர் மனோகரன், ராமலிங்கம் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு, முக்கிய நேரங்களுக்கான மின் கட்டண உயர்வு, நிலைக்கட்டண உயர்வு போன்றவற்றால் சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். சோலார் பேனல் நெட்ஒர்க் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. 2 ஆண்டுகளுக்கு மின்கட்டணத்தை உயர்த்தக் கூடாது. சிறு தொழில் நிறுவனங்களுக்கு, மின் கட்டணத்தை 3பியில் இருந்து, 3ஏ1க்கு மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் இடம்பெற்று இருந்தன.

Next Story