நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் புதிய சமுதாய கழிப்பிட வசதி
கழிப்பிட வசதி
குமாரபாளையம் வார்டு எண் 14 ராஜாஜி குப்பம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சமுதாய கழிப்பிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனை அகற்றிவிட்டு புதிய சமுதாயம் கழிப்பிடம் கட்ட வேண்டி நகர மன்ற உறுப்பினர் தீபா விஸ்வநாதன் கோரிக்கையை ஏற்று நகர மன்ற தலைவர் த. விஜய்கண்ணன் மிகவும் பழுதடைந்த கழிப்பிட கட்டடங்களை ஆய்வு செய்தார். பின்பு தூய்மை பணியாளர்களிடம் கோரிக்கைகளை கேட்டு அறிந்த நகர மன்ற தலைவர் ராஜாஜி குப்பம் பகுதியில் சுமார் 27 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய கழிப்பிடம் அமைக்க திட்ட வரைவு அறிக்கை தயார் செய்து அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் புதிய சமுதாய கழிப்பிட கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பொறுப்பு குழு உறுப்பினர் செந்தில்குமார், பன்னீர்செல்வம், நகர மன்ற உறுப்பினர் தர்மராஜன், வார்டு செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்