அபுதாபியில் பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளர்களுக்கு அய்மான் சங்கம் உதவி

அபுதாபியில் பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளர்களுக்கு அய்மான் சங்கம் உதவி

அய்மான் சங்கம் உதவி

அபுதாபி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த ௨௮ தொழிலாளர்கள் விசிட் விசா மூலம் வேலைக்கு வந்தனர். அதன் பின்னர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு விசா வழங்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த தங்கம் ( 88709 16527 / 80567 65009 / 77089 34009) என்ற ஏஜெண்ட் மூலம் கம்பி கட்டுதல் உள்ளிட்ட வேலைகளுக்கு கடந்த ஏப்ரம் மாதம் வந்தனர். ஆரம்பத்தில் ஓரிரு மாதங்கள் மிகவும் சிரமப்பட்டு மாத சம்பளம் பெற்று வந்தனர். அதன் பின்னர் முறையாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து அபுதாபி தொழிலாளர் நீதிமன்றம், இந்திய தூதரகம் ஆகியவற்றில் புகார் தெரிவித்தனர். சம்பளம் வழங்கப்படாததால் உணவு உள்ளிட்டவற்றுக்கு சிரமப்பட்டு வரும் அவர்களுக்கு அபுதாபி அய்மான் சங்கம் உணவு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

மேலும் அவர்களை சொந்த ஊருக்கு திரும்ப அனுப்பி வைக்க அபுதாபி அய்மான் சங்கம், அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் நிர்வாகி முபாரக் முஸ்தபா, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை பிரதிநிதி எஸ்.எஸ். மீரான் உள்ளிட்டோர் இந்திய தூதரகம் மூலம் விரைவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். வெளிநாட்டு வேலைக்கு வருபவர்கள் முறையான வேலைக்கான விசாவில் மட்டுமே வரவேண்டும். மேலும் விசிட் மற்றும் சுற்றுலா விசாவில் வருவதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற ஏஜெண்டுகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Tags

Next Story