அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேக விழா

அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேகம் 

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த சு.ஆடுதுறையில் உள்ள அங்காள பரமேஸ்வரி, பாவாடைராயர் கோவில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 2-ம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மனை மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட் டது. பின்னர் புனித நீர் நிரப்பிய கலசங்களை மங்கள வாத்தியங்கள் மற்றும் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்சென்று கோவில் கோபுரம் மீது ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பருவத ராஜகுல நாட்டார்கள், குலதெய்வ வழிபாட்டினர், பரம்பரை தர்மகத்தா தேவராஜ் வீட்டு குடும்பத்தினர், ஆன்மிக அன்பர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story