உள்ளாட்சி பணியாளர்களை கேடயம் வழங்கப்பட்டது.

உள்ளாட்சி பணியாளர்களை கேடயம் வழங்கப்பட்டது.

உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஊக்கப் பரிசு

உள்ளாட்சி பணியாளர்களுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அயப்பாக்கம் முதல் நிலை ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி தலைமையில் நடைபெற்றது. இதில் மதுரவாயல் எம்.எல்.ஏ காரம்பாக்கம் கணபதி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்திர ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தனர். குறிப்பாக உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், ஊராட்சி மற்றும்,மின்வாரிய ஊழியர்கள் என உள்ளாட்சிகளை கவுரவிக்கும் விதமாக புத்தாடை மற்றும் பழங்களுடன் கேடயம் வழங்கப்பட்டது. மேலும் இந்த கூட்ட மூடிவில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 111 நிறைமாத கர்ப்பிணிகளுக்கு சமூக வளைக்காப்பு நடைபெற்றது. இதில் கர்ப்பிணிமார்களுக்கு மாலை அணிவித்து நலங்கு வைத்தும் சமுதாய வளைகாப்பு நடத்தினர். பின்னர் 9 வகையான உணவுகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.

Tags

Next Story