கோவிலில் பித்தளை அம்மன் சிலை திருட்டு
திருடு போன சிலை
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த தொழுதாவூர் கிராமத்தில் சுமார் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் சுமார் பித்தளையில் 85 கிலோ எடை கொண்ட 2.5 அடி உள்ள அம்மன் சிலையை வைத்து கிராம மக்கள் வழிபட்டு வந்த நிலையில் இரவு மர்ம நபர்கள் யாரோ கோவிலுக்குள் சென்று கோவிலின் பூட்டை உடைத்து மக்கள் வழிபட்டு வந்த அம்மன் சிலையை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் பெயரில் திருவாலங்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சுமார் 30 ஆண்டு காலமாக அம்மனை வழிபட்டு வந்த நிலையில் எதிர் திடீரென்று அம்மன் சிலை காணாமல் போனதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
Tags
Next Story