வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாமினை ஆட்சியர் ஆய்வு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு சுருக்க திருத்த முகாமினை . பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 652 வாக்கு சாவடிகளில் இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2024-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் 09.12.2023 வரை விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது.

இதற்கென்று சிறப்பு முகாம்கள் நவம்பர் ,5, மற்று 18, 19, ஆகிய தேதிகளில், மாவட்டம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடத்தப்படவுள்ளது. அதனடிப்படையில் நவம்பர் 5ம் தேதி இன்று மாவட்டம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெறப்படும் விண்ணப்பங்கள் உரிய முறையில் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து பெற வேண்டும் எனவும், பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய காலத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களுக்கு அறிவுறித்தினார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் இராமர், பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அருளானந்தம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story