எஸ்டிபிஐ வர்த்தகர் அணி செயற்குழு கூட்டம்

எஸ்டிபிஐ வர்த்தகர் அணி செயற்குழு கூட்டம்
வர்த்தகர் அணி கூட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் வர்த்தகர் அணி நெல்லை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் சிட்டி சேக் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா வரவேற்புரை ஆற்றினார்.சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் கலீல் ரஹ்மான், மாநில செயற்குழு உறுப்பினர் பேட்டை முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநில பொதுச் செயலாளருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பேட்டை முஸ்தபா பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.புதிய மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நெல்லை தொழில் அதிபர் பேட்டை முஸ்தபாக்கு மாவட்ட தலைவர் சிட்டி சேக் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உடன் எஸ்டிபிஐ கட்சி நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் கனி, எஸ்டிடியூ தொழிற்சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிப் பாட்ஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் வதூத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story