எஸ்டிபிஐ கட்சி சார்பில் சுகாதார ஆய்வாளரிடம் மனு
நெல்லை பேட்டை 20வது வார்டு MGP தெரு ரேசன் கடை டிரான்ஸ்பார்மர் அருகில் எந்த நேரம் பார்த்தாலும் குப்பைகள் சேர்ந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு மழைக்காலமாக இருப்பதால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
முறையாக குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தக்கோரியும் குப்பைத்தொட்டி அமைத்துத்தரக்கோரியும் அதுபோல பேட்டை To பழைய பேட்டை இணைப்பு சாலையில் வெள்ளோடை பாலத்தில் அருகே சாலை வளைவாக செல்லும் இடத்தில் ஓரமாக முட்செடிகள் அதிகம் வளர்ந்து புதர்போல மண்டியுள்ளது.
இதனால் வளைவில் வரும்போது எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது என்பதால் அதனை அப்புறப்படுத்தக்கோரியும் பேட்டை சுகாதார ஆய்வாளரிடம் எஸ்டிபிஐ கட்சியின் 20வது வார்டு சார்பாக இன்று மனு அளிக்கப்பட்டது.
Tags
Next Story