குமாரபாளையத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரச்சாரம்

குமாரபாளையத்தில் மக்கள் நீதி மையம் கட்சியினர் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யத்தினர் வாக்காளர் பெயர் திருத்த முகாம் குறித்த துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர். வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், திருத்தம், செய்வதற்கான சிறப்பு முகாம் நவ. 18,19ற்கு பதிலாக, நவ. 25,26 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

இது குறித்து பொதுமக்களிடையே இந்த தகவலை தெரிவிக்கும் வகையில், மக்கள் நீதி மய்யம் மகளிரணி சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா தலைமையில் நடந்தது. நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் இந்த துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. நிர்வாகிகள் உஷா, விமலா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story