ஒருதலை காதலால் மாணவி வீட்டை நொறுக்கிய வாலிபர்: சாலை மறியல்

ஒருதலை காதலால் மாணவி வீட்டை நொறுக்கிய வாலிபர்: சாலை மறியல்

ஒருதலைக் காதல் விவகாரம்


Youth who destroyed student's house due to one-sided love: Road blockade

திருப்புவனம் அருகே வடகரை எம்ஜிஆர் நகர் மற்றும் திருப்புவனம் புதூரைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மதுரையில் உள்ள தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கின்றனர். இதில் எம்ஜிஆர்நகரைச் சேர்ந்த மாணவியை புதூர் மாணவர் ஒருதலையாக காதலித்ததுடன் இருநாட்களுக்கு முன் வடகரை எம்ஜிஆர் நகரில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

அங்கிருந்த மாணவியின் உறவினர்கள் , அப்பகுதி வாசிகள் மாணவரை கண்டித்ததுடன் இனி வந்தால் போலீசில் புகார் செய்வோம் என மிரட்டி அனுப்பியுள்ளனர். ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர் நேற்று இரவு 10 மணிக்கு சக மாணவர்கள் மற்றும் ரவுடி கும்பலை அழைத்து கொண்டு கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாணவி வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள் , டூவீலர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் 10க்கும் மேற்பட்ட டூவீலர்கள், மரங்கள், பாத்திரங்கள் சேதமடைந்தன. தட்டி கேட்ட மாணவியின் உறவினர்களை அரிவாளை வைத்து தாக்கியதில் பலரும் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த உறவினர்கள் , பொதுமக்கள் என பலரும் திருப்புவனம் - சிவகங்கை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்

. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரத்தில் மறியலில் ஈடுபட்டதால் மதுரையில் பணி முடிந்து வீடு திரும்பிய பலரும் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து மானாமதுரை டிஎஸ்பி கண்ணன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர். சாலை மறியலால் 30 நிமிடம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

தாக்குதல் நடத்தியவர்கள் அருகில் உள்ள வைகை ஆற்றினுள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று வாலிபர்கள் சிக்கினர். மேலும் போலீசார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். வடகரை எம்ஜிஆர் நகரில் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story