உணவு பொருட்கள் கையாளுபவர்களுக்கான தடுப்பூசி முகாம்

உணவு பொருட்கள் கையாளுபவர்களுக்கான தடுப்பூசி முகாம்

உணவு பொருட்கள் கையாளுபவர்களுக்கான தடுப்பூசி முகாம்


திருக்கார்த்திகை தீபம்-2023 : இராமகிருஷ்ணா உணவகத்தில் உணவகங்களின் உணவு பொருட்கள் கையாளுபவர்களுக்கான தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை இராமகிருஷ்ணா உணவகத்தில் திருக்கார்த்திகை தீபம்-2023 உணவகங்களின் உணவு பொருட்கள் கையாளுபவர் களுக்கான தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் திருக்கார்த்திகை தீபத்திருவிழா-2023 முன்னிட்டு, 40 இலட்சம் பொது மக்கள் மற்றும் பக்தகோடிகள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில், 17.11.2023 முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 446 உணவகங்களில் உணவை கையாளும் 1200 பணியாளர்களுக்கு உணவினால் பரவும் தாற்றுநோயினை தடுப்பதற்கான தடுப்பூசிபோடப்பட உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, உணவகங்களில் உணவு பாதுகாப்பு மேலாண்மை பயிற்சி பெற்ற ஒரு நபர் கட்டாயம் பணியிலமர்த்தப்பட வேண்டும். மேலும், உணவகங்களில் சுய உணவு தணிக்கை கையெடு வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். பாதுகாப்பான குடிநீரில் உணவு தயாரிக்க வேண்டும்.

நோய்தொற்று உடையவர்களை உணவகங்களில் வேலைக்கு பணியமர்த்த கூடாது. காலாவதியான பொருட்களை கொண்டு உணவு தயாரிக்க கூடாது. ஏதேனும், உணவு வழங்குவதில் ஐயப்பாடு இருந்தால் அத்தகைய உணவினை விநியோகிக்க கூடாது என மாவட்டஆட்சியர் தெரிவித்தார். பொது மக்கள் மற்றும் பக்தகோடிகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற உணவகங்கள் மற்றும் சுகாதார சான்று பெற்ற உணவகங்களில் பாதுகாப்பான உணவினை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், உணவின் தரம் பற்றியோ அல்லது ஏதேனும் ஐயப்பாடு உணவு பொருட்கள் தொடர்பாக இருப்பின் உணவு பாதுகாப்பு துறையின் புகார் எண்: 9444042322 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் உணவு பாதுகாப்பு துறை மரு.பிரதீப் கிருஷ்ணகுமார், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு அதிகாரி எழில் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story