செய்யாற்றை வென்றான் கிராமத்தில் ரபி பருவ பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் வட்டாரம் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை 2023 -24 கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்

கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு ரபி பருவம் முதல் கட்டப் பயிற்சியானது செய்யாற்றை வென்றான் கிராமத்தில் 25‌ விவசாயிகளைக் கொண்ட குழுவிற்கு 18.11 2023 அன்று மதிப்பிற்குரிய வட்டார தொழில் நுட்பக் குழுஅமைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர் மா.செல்வராஜ் தலைமையிலும் வேளாண்மை அலுவலர் திருநாவுக்கரசு ஆலோசனையுடனும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் அ.செண்பகம் ,.ம.ஜெனிபர், மு.வினோத் மற்றும் கிராம முதன்மை அலுவலர்( village nodal officer) பாதூஷா AAO மற்றும் சரவணன் கால்நடை மருத்துவர் ஆகியோர் கிராம அளவிலான முன்னேற்ற குழுவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் வட்டார தொழில் நுட்பக் குழு அமைப்பாளர் மற்றும் வேளாண்மை உதவி இயக்குனர்.மா .செல்வராஜ் மத்திய மற்றும் மாநில அரசால் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார் .

வட்டார வேளாண்மை அலுவலர் திருநாவுக்கரசு சிறுதானிய ஆண்டின் (2023) சிறப்புத்துவம் பற்றியும் சிறுதானியத்தின் சிறப்புகள் மற்றும் அதை பயிரிடக்கூடிய முக்கியத்துவத்தை பற்றியும் வேளாண் துறையில் சிறுதானியங்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் அதன் மானியங்கள் பற்றியும் பண்ணை கருவிகள் வழங்குதல் பற்றியும் குழு விவசாயிகள் இடையே தெளிவாக விளக்கி கூறினார் .

கிராம முதன்மை அதிகாரி மண்வளம் காத்தல் ,மண் பரிசோதனை, நீர் பரிசோதனை ,நீர் மேலாண்மை, கோடை உழவு ,ஆகியவற்றை பற்றியும் அதன் முக்கியத்துவத்தை பற்றியும் விளக்கிக் கூறினார் .

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் வட்டார தொழில்நுட்ப மேலாளர் அ.செண்பகம் E_NAM பற்றி குழு உறுப்பினர்களிடையே விளக்கிக் கூறினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் ம.ஜெனிபர் உழவன் செயலி பயன்பாடுகள் மற்றும் அதனை பயன்படுத்தும் முறை உழவன் செயலிக்குள் இருக்கும் ஒவ்வொரு துறையின் செயல்பாட்டு திட்டங்கள் பற்றியும் உழவன் செயலில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள தமிழ் மண்வளம் என்பதின் பயன்பாடுகள் பற்றியும் மற்றும் பிரதம மந்திரியின் பி .எம். கிசான் திட்டத்தைப் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார்.

உதவி தொழில் நுட்ப மேலாளர் ம.ஜெனிபர் இப்பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பயிற்சி இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் செயல்படுத்தப்பட்டு வரும் பயிற்சிகள் செயல் விளக்கங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். இப் பயிற்சியில் 25 உறுப்பினர்கள் கலந்து கொண்டு வேளாண்துறை திட்டங்கள் பற்றியும் அதில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றியும் அறிந்து தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை வேளாண் துறை அலுவலர்களிடையே கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர்

இப்ப பயிற்சியில் வேளாண்துறை மற்றும் சகோதரநத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயியின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

Tags

Next Story