திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தை எஸ்பி நேரில் ஆய்வு

திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தை எஸ்பி நேரில் ஆய்வு

மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு

திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தை எஸ்பி ஜெயக்குமார் நேரில் ஆய்வு

திருத்துறைப்பூண்டி மற்றும் விக்கிரபாண்டியம் காவல் நிலையங்களை எஸ்பி ஜெயக்குமார் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்தும், காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய வழக்குகளின் தற்போதைய நிலைகளையும் ஆய்வு செய்தார்

.திருத்துறைப்பூண்டி மற்றும் விக்கிரபாண்டியம் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும் விக்ரபாண்டியனம் காவல் நிலைய கட்டிடத்தை ஆய்வு செய்து தோட்டத்தில் தென்னை மரக்கன்று நட்டு வைத்தார் .ஆய்வின் போது திருத்துறைப்பூண்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் உள்ளிட்ட காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story