குமரி அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான கலைத்திருவிழா
குமரி அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான கலைத்திருவிழா நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கலைத்திரு விழா போட்டிகள் குமரி மாவட்டத்தில் 5 நாட்கள் நடத்தப்படுகிறது. திருவட்டார் அருணாச்சலம் மேல்நிளைப்பள்ளி வளாகத்தில் நடந்த துவங்க விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி தலைமை வகித்தார்.
21-ம் தேதி இந்த போட்டி துவங்கியது . இன்று 23-ம் தேதி 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு கவின் கலை மற்றும் நுண்கலை போட்டிகள், இசை, வாய்ப்பாட்டு, நடனம், நடக்கிறது. நாளை 24ம் தேதி கருவி இசை, தோற்கருவி போட்டிகள், கருவி இசை, துளை, காற்று கருவிகள்,இசை சங்கமம், நாடகம், மொழித்திறன், கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகிறது.
மாவட்டத்தின் அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் இருந்தும் கலைப்போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் ஆசிரியர்களுடன் வருகை தந்திருந்தனர்.
Tags
Next Story