ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெய்த கனமழை: போக்குவரத்து துண்டிப்பு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தமிழகத்தை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குறிப்பாக கடலோரம் மற்றும் மலையடிவார மாவட்டங்களான இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, சிவகங்கை உள்ள மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளுக்கு நீர் வளர்த்த அதிகரித்துள்ளது. கூமாபட்டியில் இருந்து பிளவக்கல்அணை செல்லும் சாலையில் கிழவன் கோவில் பகுதியில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மாற்று பாதையாக தற்காலிகமாக போடப்பட்ட சாலை நேற்று பெய்த கன மழையில் சேதம் அடைந்துள்ளது. இதனால் பிளவக்கள் அணை, பட்டு பூச்சி பகுதிகளுக்கு வாகனங்கல் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.