கீழே கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு குவியும் பாராட்டு
சார்பு ஆய்வாளர் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் பாலம் அருகே பாகனேரியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மணி பர்ஸ் கீழே விழுந்துள்ளது.
அதில் ரூபாய் 5,500 பணம் மற்றும் ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு ,ரேஷன் கார்டு, பான் கார்டு ஆகியவை இருந்ததாகவும் காணாமல் போன மணிபர்சை கீழப்பூங்குடியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சத்யராஜ் என்பவர் எடுத்து வந்து மதகுபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் நாச்சாங்களையிடம் கொடுத்த நிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது
Next Story