அரவக்குறிச்சியில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதிய நூலக திறப்பு விழா.

அரவக்குறிச்சியில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதிய நூலக திறக்கப்பட்டது.

அரவக்குறிச்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதிய நூலகம் திறப்பு விழா. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, ஏவிஎம் கார்னர் பகுதியில் தளபதி மக்கள் இயக்க மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் புதிய நூலக திறப்பு விழா நடைபெற்றது.

இதே கட்டிடத்தில், ஏற்கனவே கடந்த 100 நாட்களாக அப்பகுதியைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு பயிலகம் காலை 6- முதல் 8 மணி வரை நடைபெற்று வருகிறது. இன்று முதல் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நூலகம் செயல்படும். இந்த நூலகத்தில் சுதந்திரப் போராட்ட அரசியல் தலைவர்கள் வரலாறு, இலக்கிய நூல்கள், சிறுகதைகள், அரசு பணி தேர்வுக்கான புத்தகங்கள் என 600க்கும் மேற்பட்ட நூல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இங்கு வழங்கப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உறுப்பினராக மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள் சேர்ந்து கொள்ளலாம்.இன்று முதல் நாள் மாணவர்கள், பெண்கள் என 10- பேர் உறுப்பினராக சேர்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், செயலாளர் பாலு, அரவக்குறிச்சி ஒன்றிய தலைவர் சதீஷ், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு நூலக திறப்பு விழாவை சிறப்பித்தனர்.

Next Story