கொக்கம்பட்டி முத்தாலம்மன், பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

கொக்கம்பட்டி முத்தாலம்மன், பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கொக்கம்பட்டியில் அருள்மிகு முத்தாலம்மன், பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுக்கா, அப்பிபாளையம் கிராமத்தில் உள்ள கொக்கம்பட்டியில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு முத்தாலம்மன், அருள்மிகு பகவதி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இன்று அதிகாலை முதலே மழை பெய்த போதும், மழையோடு மழையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலையில் இரண்டாம் காலையாக பூஜை, மூர்த்தி ஹோமங்கள், நாடி சந்தானம், ஸ்பர்சாகுதி, திரவியாகுதி, மஹா பூர்ணாகுதி, கடம் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற பிறகு, கொக்கம்பட்டி ஊர் பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்த கும்பாபிஷேக விழாவில், சிவாச்சாரியார்கள் புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தி, மகா தீபா ஆராதணையும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story