அருப்புக்கோட்டை ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் ஆய்வு

அருப்புக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உட்பட்ட பெரியவள்ளிக்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6.09 இலட்சம் மதிப்பில் 116 வது காலனியில் பேவர்பிளாக் அமைக்கும் பணிகளையும், ரூ.6.18 இலட்சம் மதிப்பில் பள்ளி மாணவிகளுக்கான கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டு வரும் பணிகளையும், பெரிய வள்ளிக்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.8.47 இலட்சம் மதிப்பில் ராமசாமிபுரம் ஊரணி தூர்வாரப்பட்டு தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினையும், பாலவநத்தம் கிராமத்தில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.57 இலட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம் கட்டிமுடிக்கப்பட்ட பணியினையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மானியத்தில் வீடு கட்டப்பட்டு வருவதையும், மலைப்பட்டி கிராமத்தில்,

2020-2023 பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பில் ஊரணிக்கு வடக்கு திசையில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினையும், கனிமவள நிதியின் கீழ் ரூ.12.80 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுவரும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும்,

தரமாகவும் முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

Tags

Next Story