கந்து வட்டி கொடுமை: தொழிலாளி தற்கொலை..!
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள புங்கரை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 62), கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்தவரிடம் இருந்து ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் இதற்காக வட்டி மற்றும் கடன் தொகையை முழுவதையும் கட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடன் கொடுத்த நபர் இன்னும் ரூ.70 ஆயிரம் தர வேண்டி உள்ளது என கூறி செல்லத்துரையிடம் தொடர்ந்து பணம் கேட்டு தெந்தரவு செய்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த செல்லதுரை அவர் நேற்று முன்தினம் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்துள்ளார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் செல்லத்துரை இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்து வட்டி கொடுமையால் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.