சம்பா நெல் சாகுபடியில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
வந்தவாசி பகுதியில் சம்பா நெல் சாகுபடியில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
வந்தவாசி பகுதியில் சம்பா நெல் சாகுபடியில் இலை சுருட்டுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாரத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெல் பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வயல் ஆய்வின் போது M.கார்திக்கேயன் வேளாண் விஞ்ஞானி மற்றும் வேளாண் உதவி இயக்குனர் த .செல்லதுரை ஆலோசனை வழங்கினார்கள்.. இது குறித்து உதவி இயக்குனர் வந்தவாசி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாரத்தில் தற்பொழுது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக நெல் பயிரில் இலை சுருட்டு புழுக்கள் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது இதனை விவசாயிகள் பின்வரும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப முறையின் மூலம் கட்டுப்படுத்தலாம். இலை சுருட்டுப்புழுக்கள் நெல் பயிரின் இலைகளை ஒன்றிணைத்துக் கொண்டு அவற்றில் உள்ள பச்சயத்தை சுரண்டி உண்பதால் இலைகள் வெள்ளை நிறத்தில் காணப்படும் இவ்வாறு பச்சயம் முழுவதும் சுரண்டப்பட்ட பயிர் எரிந்தது போல காணப்படும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளில் அதிகரித்து காணப்படும் இதன் தாக்குதலை கட்டுப்படுத்த வரப்புகள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் தழைச்சத்தினை பரிந்துரை அளவுக்கு மேல் இடாமல் தேவையான அளவு தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவை பிரித்து உரம் இடவேண்டும் விளக்கு பொரியினை மாலை 6;30 மணி முதல் இரவு 10 மணி வரை ஒளிர விட்டு தாயை அந்து பூச்சிகளை கவர்ந்து அளிக்கலாம் மற்றும் ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் ஏக்கருக்கு 2 சிசி அளவு நடவு செய்த 37, 44 மற்றும் 51 ஆவது நாட்களில் காலை நேரத்தில் வயலில் விட்டு இப்புழுவின் முட்டை குவியலை அழிக்கலாம்.மேலும் 3 அடி உயரம் கொண்ட குச்சிகளை பறவை இருக்கையாக அமைத்து பறவைகளை கவர்ந்து அவை தாய் அந்து பூச்சிகளை பிடித்து உண்பதற்கு வழிவகை செய்யலாம். இவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் இப்புழுக்களை கட்டுப்படுத்த வேண்டும். பயிர்வளர்ச்சி பருவத்தில் இருந்தால் மருந்தினை கொண்டு பூச்சிகளை கட்டுப்படுத்திடலாம்.ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோகுளோரைடு என்ற மருந்தினை ஏக்கருக்கு 400 கிராம், குளோராண்ட்ரானிலிப்ரோல் 30 மிலி , ப்ளூபென்டமைடு 30 மிலி இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தினை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். விவசாயிகள் தங்கள் பயிர் சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடன் உழவன் செயலி மூலம் படம் பிடித்து அனுப்பினால் 24 மணி நேரத்திற்குள் தங்களுக்கு அலைபேசிக்கு உரிய பரிந்துரை அனுப்பி வைக்கப்படும். எனவே விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையினை பயன்படுத்தி நெல் பயிரில் தாக்கும் இலை சுருட்டு புழுவை கட்டுப்படுத்தி மகசூல் பாதிப்பை தவிர்க்கலாம் என வந்தவாசி வேளாண்மை உதவி இயக்குனர் ஆலோசனை தெரிவித்தார்.
Next Story