முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பாதரை எலந்த குட்டை கிராமம் வெப்படை அருகே அமைந்துள்ள, அருள்மிகு மகா கணபதி சப்த கன்னிமார்,மகா முனியப்பன், கருப்பனார் சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது .

பள்ளி பாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக கருதப்படும் இந்த கோவில் கும்பாபிஷேக விழாவானது கடந்த 19.11.2023 அன்று கிராம சாந்தி நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக துவக்க விழா நடைபெற்றது.

இதன் பின்னர் தொடர்ச்சியாக மகா கணபதி யோகம், மகாலட்சுமி யோகம், பிரவேச பலி ,காவேரி தீர்த்தம் அழைத்து வருதல், மங்கள இசை தீப வழிபாடு, பாலாலய மூர்த்திகளை எழுந்தருள செய்தல், அக்னி காரியம் உள்ளிட்ட விசேஷ நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் ,நவம்பர் 23 அன்று அதிகாலை நான்கு கால யாக பூஜை செய்யப்பட்டு, காலை 8 மணி முதல் ஒன்பது மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது,

சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர், மேலும் பக்தர்கள் அதிகமாக வந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்,.நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story