மருத்துவக் கல்லூரியில் ஏசி பழுதால் நோயாளிகள் அவதி
கலெக்டர் அலுவலகம்
மருத்துவக் கல்லூரியில் ஏசி பழுதால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏசி பழுதானதால் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் அவதிப்படுவதாக தெரிவிக்கின்றனர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அவசர சிகிச்சை 500-வது வார்டில் குளிர்சாதன வசதி உள்ளது. இந்த வார்டில் 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன.
இங்குள்ள 8 குளிர்சாதனங்களும் பழுதடைந்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் குளிர்சாதனங்கள் இயங்க வேண்டும். ஆனால் இவை பழுதாக உள்ளதால் டாக்டர்களும், நோயாளிகளும் சிரமத்துக்கு உள்ளாவதாக தெரிவிக்கின்றனர்
Next Story