சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மழை நீரால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் அவதி
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சாலை கிராமத்தில் 7000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் காமராஜர் காலனி ஆர்.எஸ் மங்கலம் விலக்கு முதல் பேருந்து நிலையம் வரை இருந்த கால்வாய்கள் முற்றிலும் காணாமல் போயின. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்குகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தொடர் வலியுறுத்தலை அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் அளவீடு செய்து கால்வாய் பகுதிகளை அதிகாரிகள் கண்டறிந்தனர். ஆனால் அதில் கால்வாய்கள் இல்லை. தொடர்ந்து அங்கு கால்வாய்களும் கட்டவில்லை. இதனால் தற்போது மழை பெய்யும் போது தண்ணீர் செல்ல வழியின்றி மெயின் சாலை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்குகிறது. வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் காயமடைந்து வருகின்றனர். மேலும் பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்குவதால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர்
Next Story