சமுதாய கல்லூரியில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி - வட்டாட்சியர் பங்கேற்பு

சமுதாய கல்லூரியில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி - வட்டாட்சியர் பங்கேற்பு

சீருடை வழங்கல்

கல்லூரி மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே புதுக்காட்டாம்பூரில் அமைந்துள்ள நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியில் பயிற்சி சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. வட்டாட்சியர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் இக்கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஏழை-எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்றுவிக்கப்படும் பணி உதவியாளர், மாதிரி தையல் பயிற்சி போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்தும், பயிற்சி காலம் முடிந்து எவ்வாறு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு பயிற்சிக்குரிய சீருடைகளை 60 மாணவர்களுக்கு வட்டாட்சியர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள் சிவநேசன், மோனிஷா, பூவிழி, கனிமொழி ஆகியோர் செய்திருந்

Tags

Next Story