ஒன்றிய கூட்டத்தில் பங்கேற்காத அரசு அலுவலர்கள் - ஒன்றிய தலைவர் வேதனை

ஒன்றிய கூட்டம்
தேவகோட்டை ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் சாதாரண கூட்டம் அதன் தலைவர் பிர்லாகணேசன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராஜாத்தி நடராஜன். ஆணையாளர் பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் மேலாளர் புவனேசுவரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் தலைவர் பிர்லா கணேசன் பேசியதாவது:- தேவகோட்டை ஒன்றியத்தில் வறட்சி நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு கணக்கெடுப்பில் குறைபாடுகள் உள்ளது அவற்றை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும். பயிர் காப்பீடு, இழப்பீடு அனைத்து கிராமங்களுக்கும் சரியான முறையில் கிடைத்திட வேண்டும்.
தேவகோட்டை ஒன்றி யத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அனைத்து கிரா மங்களின் உள்ள நீர் தேக்க தொட்டிகள் அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்யப்பட வேண்டும். மேலும் டெங்கு தடுப்பு குறித்து தீவிர நடவடிக்கை எடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய கூட்டங்களுக்கு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தபால் அனுப்பியும் அதிகாரிகள் கூட்டத்திற்கு வராமல் உள்ளனர். இதனால் அந்தந்த துறை சார்ந்த குறைகளை எடுத்துக் கூற முடியாமல் உள்ளது. இதனால் ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களின் துறை சார்ந்த குறைகளை எடுத்துக் கூறியும் நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் கிராம ஊராட்சிகளில் முதல் அனைத்து கூட்டங்களுக்கும் அனைத்து துறை அதிகாரிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தும் தற்பொழுது நடைபெற்ற கூட்டத்திற்கு அதிகாரிகள் வராததை கண்டித்து தீர்மானம் ஏற்றப்பட்டு உள்ளது என பேசினார்
