பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு வாங்குவதற்கான கடனுதவி வழக்கும் விழா

பால் உற்பத்தியாளர்களுக்கு கறவை மாடு வாங்குவதற்கான கடனுதவி வழக்கும் விழா
X
10 நபர்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது
சிவகங்கை மாவட்டம், வாராப்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இக்கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் உற்பத்தியை அதிகப்படுத்தும் முயற்சியாக பால் உற்பத்தியாளர் சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு புதிதாக கறவை மாடு வாங்குவதற்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் செயல்பட்டு வரும் கனரா வங்கி கிளையில் முதல் கட்டமாக சுமார் பத்து நபர்களை தேர்வு செய்து நபர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கும் கடன் முயற்சியை ஊராட்சி மன்ற தலைவர் மேற்கொண்டு வந்தார். அதன் அடிப்படையில் இங்குள்ள சமுதாயக் கூடத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு வங்கி மேலாளர் ரமேஷ்பாபு அதற்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி அலுவலர் அஞ்சு, துணைத் தலைவர் சித்ரா, செயலர் வெள்ளைச்சாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story