எடப்பாடி அருகே போடிநாயக்கன்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா.

எடப்பாடி அருகே போடிநாயக்கன்பட்டி பகுதியில் ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார தேவதைகள் கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது. சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் ஆவணிபேரூர் கீழ்முகம் கிராமம் போடிநாயக்கன்பட்டி பகுதியில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர்,அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கணபதி ஹோமம், சரஸ்வதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோம பூஜைகள் நடைபெற்றது. மங்கள வாத்தியம் முழங்க யாகசாலையிலிருந்து சிவாச்சாரியர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றி வந்து முதலில் அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கோவிலிலுள்ள கோபுர கலசத்திற்கும் அடுத்ததாக ஸ்ரீ காளியம்மன் கோவில் கோபுர கலசத்திற்கும் புனித தீர்த்தத்தம் ஊற்றி ஓம்சக்தி என முழக்கமிட்டபடி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாதாரணையை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ காளியம்மன் சுவாமிக்கும் புஷ்பங்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் காட்டப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் போடிநாயக்கன்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 1000யிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமியை வழிபட்டுச்சென்றனர். கும்பாபிஷேக விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story