கழிவுநீர் விவசாய நிலங்களில் கலப்பு

கழிவுநீர் விவசாய நிலங்களில் கலப்பு

விவசாய நிலம்

நகராட்சி நிர்வாகத்தால் அழிந்து வரும் விவசாயம் - விவசாயிகள் வேதனை

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சி பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீரை முத்துப்பட்டி கண்மாய் அருகே உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து வருகின்றனர். இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு செலுத்த வேண்டிய இரண்டு கோடி ரூபாய் பணத்தை நகராட்சி நிர்வாகம் தராததால் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் சாக்கடை கழிவு நீரை அப்படியே கண்மாய்க்குள் வெளியேற்றி வருவதால் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கண்மாய் நிரம்பி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் செல்கிறது.

இதனால் விவசாயம் செய்ய முடியாமலும் நிலத்தடி நீரும் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதால் குளிக்க கூட முடியாத அவல நிலை இருப்பதாக விவசாயத்தை வேதனை தெரிவிக்கின்றனர்

Tags

Next Story