திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்
அண்ணாமலையார் கோயில்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அங்குள்ள மகா தீபமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர். ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம்.
நாளை மறுநாள் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுமார் 5 லட்சம் பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அதன்படி கார்த்திகை மாத பவுர்ணமி நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.58 மணிக்கு தொடங்கி மறுநாள் திங்கள் கிழமை மாலை 3.08 மணிக்கு நிறைவடைகிறது.
இது கிரிவலம் செல்ல உகந்த நேரம்.மேலும் தீபத் திருவிழாவில் பவுர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.