கிருஷ்ணர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
கிருஷ்ணர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது
கிருஷ்ணர் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, பெரிய கணக்கம்பட்டியில் அமைந்துள்ள, ராதா ருக்மணி, சமேத ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடந்தது. கடந்த 19 ல்,கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து மகா சுதர்சன ஹோமம், கோ பூஜை செய்து, அன்று மாலை வாஸ்து சாந்தி,முதல் கால யாக பூஜை, வேத பாராயணத்துடன் தூங்கியது. காலை திருப்பள்ளி எழுச்சியுடன் வேத பாராயணம் ஓமங்கள், மகா பூர்ணாகுதி நடைபெற்று, மகா தீபாரதனை கலசங்களுக்கு காண்பிக்கப்பட்டு புனித நீர் கலசங்கள், மேளதாளங்களுடன் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று தீர்த்தங்கள் கோபுர கலசத்திற்கு புனித நீர் தெளிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழா ஏற்பாடுகளை படப்பள்ளி பஞ்., தலைவர் சீதாலட்சுமி ராமாமிர்தம், ஊர் நாயுடு ரமேஷ், ஊர் தர்மகர்த்தா கோகுல், பெரிய கணக்கம்பட்டி யாதவ மகாசபை தலைவர் மணிவண்ணன் மற்றும் விழா குழுவினர் திருமால், நடராஜ், யாதவர் இளைஞர் அணி பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக நிகழ்வுகளை குன்னத்தூர் சீனிவாச ஐயங்கார் குழுவினர், பெரிய கணக்கம்பட்டி நாதஸ்வர வித்துவான் மோகன், திருப்பதி தேவஸ்தான வித்துவான் தேவராஜ் ஆகியோர் மங்கல இசை குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் ஊர் பொதுமக்கள் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story