குமரியில் தனியார் ஸ்கேன் மையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் தனியார் ஸ்கேன் மையங்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார். கலெக்டர் தலைமையில் குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் பொறுப்பு அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நாகர்கோவில், மார்த் தாண்டம் ஸ்கேன் மையங்கள், குழித்துறை அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.
இதில் ஸ்கேன் மையங்களுக்கான லைசென்சு நகல் ஸ்கேன் மைய நுழைவிடத் தில் பார்வையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் முதல் தளத்தில் ஸ்கேன் அறையின் அருகேயே நோயாளிகளுக்கான கழிவறை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டது.
'படிவம் எப்' முறையாக பராமரிக்கப்பட வேண்டும் ஸ்கேன் மையத் தில் இடவசதி குறைவாக இருப்பதால் தக்க நடவ டிக்கை எடுத்து அதனை சரி செய்ய வேண்டும். மேலும் அனைத்து ஆவணங்களும் சரியாக பராமரிக்க வேண் டும் என்று அதன் பணியா ளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் அறிவுறுத்தப்பட்டது.