பெருமாள் கோவிலில் கல் மண்டபம் அமைக்கும் பணி துவக்கம்

பெருமாள் கோவிலில் கல் மண்டபம் அமைக்கும் பணி துவக்கம்

கல் மண்டபம் அமைக்கும் பணி 

பெருமாள் கோவிலில் கல் மண்டபம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணியை முன்னிட்டு கல் மண்டபம் அமைப்பதற்காக சிறப்பு பூஜைக்கு பின் கல் தூண்கள் நிறுவப்பட்டன.

அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அறங்காவல குழு உறுப்பினர்கள் பங்கேற்பு தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயம் ஆகும். இந்த ஆலயத்தில் கும்பாபிஷேக பணிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் திருக்கோவிலுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஏசி செந்தில்குமார் தலைமையில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு திருப்பணிகள் விரைவு படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்பில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகுண்டபதி பெருமாள் கோவில் வளாகத்தில் பூதேவி ஸ்ரீதேவி சன்னதிகள் புதிதாக உருவாக்கப்பட்டு ஆலய வளாகம் முழுவதும் கல் மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக முதல் கல்தூண் ஆலய வளாகத்தில் நிறுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகளுக்கு பின் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ஏசி செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் கல்தூண் ஆலய வளாகத்தில் நிறுவப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெருமாள் கோயில் பட்டர் வைகுண்டம், திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், சிவன் கோயில் அறங்காவல குழு தலைவர் கந்தசாமி, திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல், வட்ட செயலாளர் கங்கராஜேஷ், வழக்கறிஞர் சதீஷ்குமார், பெருமாள் கோவில் அறங்காவல குழு உறுப்பினர்கள் பாலசங்கர், மந்திரமூர்த்தி, ஜெயபால், முருகேஸ்வரி, சிவன் கோயில் அறங்காவல குழு உறுப்பினர்கள் பி எஸ் கே ஆறுமுகம், ஜெயலட்சுமி, சாந்தி, உள்ளிட்டஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story