பேராவூரணி கூரை வீடு தீப்பற்றி எரிந்து சாம்பல்

பேராவூரணி கூரை வீடு தீப்பற்றி எரிந்து சாம்பலானது.

தஞ்சாவூர் மாவட்டம், மருங்கப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (65) அவரது மகன்கள் சரவணன், வீரமணி, ராஜலிங்கம், சக்திவேல். இவர்கள் அனைவரும் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர்.

நடராஜன் தனது மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் கூட்டுக் குடும்பமாக ஒரே கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் வீட்டில் உள்ள அனைவரும் விவசாய வேலைக்காக சென்ற நிலையில், கூரை வீடு எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது.

வீட்டின் அருகே வேலை செய்து கொண்டிருந்த நடராஜனின் மகன் சரவணன் வீடு எரிந்ததை பார்த்து தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். இதனிடையே பேராவூரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சென்று அக்கம்பக்கம் தீ பரவாமல் அணைத்து விட்டனர்.

ஆனாலும் வீடு முழுவதுமாக தீயில் எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்த ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரம், 5 பவுன் நகையும், வீட்டில் உள்ள அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை என அனைத்தும் தீயில் எரிந்து கருகியது,

மின்கசிவினால் தீப்பற்றி இருக்கும் என கூறப்படுகிறது. தகவல் அறிந்து வருவாய் ஆய்வாளர் வெற்றிச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் பாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களுக்கு உணவு, உடை வழங்கி, தங்கும் வசதி ஏற்பாடு செய்தனர். இதுகுறித்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story