தண்ணீர் குடிக்க வந்த மானை கடித்த நாய்கள் - பொதுமக்கள் மீட்பு
வனத்துறையிடம் ஒப்படைத்தனர்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை சுற்றியுள்ள வனப்பகுதியில் அதிக அளவில் புள்ளிமான்கள் உள்ளன. இந்நிலையில் தண்ணீர் குடிக்க திருப்பத்தூர் புதுப்பட்டி குடியிருப்பு பகுதிக்குள் இரண்டு வயது உள்ள பெண் புள்ளிமான் வந்துள்ளது. அதனை அங்கிருந்த நாய்கள் விரட்டி கடித்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் நாய்களிடமிருந்து மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் மானை மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்தனர். அதன்பின்பு மானை கம்பனூர் வனப்பகுதிக்குள் விட்டனர்
Next Story